மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ? இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர், ராஜீவ் சர்மா என்ற டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். கடும் உழைப்பைச் செலவிட்டு, மென் பொறியாளரான அன்புத் தோழர் ஆனந்தராஜ், இதை மொழி பெயர்த்திருக்கிறார்.
இந்தப் புத்தககத்தை சவுக்கு பதிப்பகம் சார்பாக முதல் நூலாக வெளிக் கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வரும் ஜுன் 4, சனிக்கிழமை அன்று, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகரில் உள்ள செ.நாயகம் தியாகராயர் மேல்நிலைப் பள்ளியில் மாலை 5 மணிக்கு இந்நூல் வெளியிடப் படுகிறது.இந்த நூலை சவுக்கு வாசகர்கள் அனைவருக்கும் சவுக்கு, சமர்ப்பிக்கிறது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிப்பீர்கள் தானே ?
0 comments:
Post a Comment