Sunday, December 5, 2010

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா?

1 comments
இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர்.முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு.இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத...

Thursday, November 11, 2010

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்.

1 comments
காங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே தொடங்கிவைத்தார். நேரு கடைபிடித்த அணி சேரா கொள்கையை குப்பையில் தூக்கி எரிந்து அமெரிக்காவுடன் கை கோர்த்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் வல்லரசாக வேண்டும் என்ற கனவில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்க்குள் நுழைவதற்க்கான...

Wednesday, November 3, 2010

இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?

0 comments
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம்...

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

0 comments
1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில்...

Thursday, October 28, 2010

ராஜீவ் காந்தி கொலை: அன்றே எழுதப்பட்ட ஒரு தீர்க்க தரிசனம் ?

0 comments
போபால் விஷவாயுக் கசிவு: நாம் அனைவரும் அறிந்த விடையம். அறியாத விடையங்களும் நிறையவே உள்ளது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன், மற்றும் ராஜீவ் காந்தியின் கூட்டுச் சதியே இந்த போபால் விஷவாயு தாக்கிய பல சம்பவங்களை மறைத்தது என்றால் ஆச்சரியமாக இல்லையா.இந்தியாவில் போபால் என்ற இடத்தில் யூனியன் காபைட் என்ற அமெரிக்க நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை ஒன்றை நிறுவியிருந்தது. நடுத்தர வர்க்க மக்கள் என்றாலும் அக் கிராமத்தில் சிறுபிள்ளைகள், வயோதிபர்கள் என அனைவரும் தமது வீடுகளில் உறங்கிக்கொண்டு இருந்தனர்....

Sunday, October 24, 2010

உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி பேரறிவாளன்

0 comments
உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிமரணதண்டனை வேண்டாம்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன்மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண். 13906நடுவண் சிறை, வேலூர் - 2அன்புக்குரியீர்,வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி...

பேரறிவாளன் - துயரக் காற்றில் அலையும் தீபம்.

0 comments
( ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் எழுதிய தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – என்று நூலை முன் வைத்து) மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது . மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும்...