
காங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே தொடங்கிவைத்தார். நேரு கடைபிடித்த அணி சேரா கொள்கையை குப்பையில் தூக்கி எரிந்து அமெரிக்காவுடன் கை கோர்த்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் வல்லரசாக வேண்டும் என்ற கனவில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்க்குள் நுழைவதற்க்கான...